திருவிழாக்கள்
பங்குனி உத்திர பெருவிழா
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த விழா பங்குனி உத்திரம். பங்குனி மாதத்தில் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவானது ஆத்திப்பட்டு கிராமத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது உத்திரம். அந்த நாளில் பவுர்ணமியும் இணைந்து வருவது சிறப்பாகும். தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் என்பதால் பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனாலேயே இதை பங்குனி உத்திர விரதத்திற்கு திருமண விரதம் என்ற பெயரும் உண்டு முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். ஆனால் பங்குனி உத்திரமானது முருகப் பெருமானுடன் மட்டுமல்ல பல தெய்வங்களுடனும் தொடர்புடைய நாளாகும். பல தெய்வ திருமணங்கள் நடைபெற்றதும் இந்த நாளில் தான் என சொல்லப்படுகிறது.
சித்தர் ஜீவசமாதி ஜோதி பெருவிழா
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே..
ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன்செய்தல் என்றுப் பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இருகண்களினும் மேலாகப் பின்பற்றி வருகின்றனர். உடலையும், உள்ளத்தையும் மாசின்றி பேணிக்காக்கின்றனர்.
அலைமோதும் ஜீவனை ஒருநிலைப்படுத்தி, தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை. 'தன்னை அறிய தனக்கொரு கேடில்லை' என்கிறார் திருமூலர். இறைவனை அடைய அனைவரும் சொன்ன ஒரே வழி, 'அன்புமார்க்கம்'தான். கடவுளைக் காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள். ஆனால், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.
காணொளி
சித்தர் ஜீவசமாதி
"ஓம் நம சிவாய" என்பது அழிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் பிரபஞ்ச தெய்வமான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் ஒரு மரியாதைக்குரிய மந்திரமாகும். அர்ப்பணிப்பு பயிற்சி மூலம், இந்த மந்திரம் உள் அமைதி, சமநிலை மற்றும் ஆன்மீக பரிணாமத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இது நமக்குள்ளும் பிரபஞ்சத்திலும் வசிக்கும் தெய்வீக ஆற்றலுடன் இணைவதற்கான ஒரு அழைப்பு.
அன்னதான விழா
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
கைலாயவாத்தியம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே!!!
சிவாய நமஓம் சிவாய நமஹ!
சிவாய நமஓம் நமச்சிவாய!
முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் ஆகும்.
அறுபடைவீடுகள்
1. திருப்பரங்குன்றம் - சூரபத்மனைப் போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
2. திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று, வெற்றி வாகையைச் சூடிய திருத்தலமிது.
3. பழநி - மாங்கனிக்காகத் தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
4. சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி, தகப்பன்சுவாமியாகக் காட்சிதரும் திருத்தலமிது.
5. திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
6. பழமுதிர்சோலை - ஔவைக்குப் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.
தமிழ் பெயர்கள்
முருகன்: முருகு என்றால் அழகு என்பது பொருள் ஆகும். ஒப்பற்ற பேரழகை உடையவன் ஆதலின் முருகன் என்று அழைக்கப்படுகிறான்.
ஆறுமுகன்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதகம் என்ற சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகங்களானது. ஆறுமுகங்களைக் கொண்ட தமிழ் கடவுள் ஆறுமுகன் என்றழைக்கப்படுகிறார்.
குகன்: குறுஞ்சி நிலத்தின் தெய்வமாம் முருகப் பெருமான் மலைக் குகைகளில் கோவில் கொண்டதால் குகன் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் மனகுகையிலும் இவர் வீற்றிருப்பதால் குகன் என்றும் போற்றப்படுகிறார்.
குமரன்: இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரி ஆனவன், மிகவும் உயர்ந்தவன்.
குருபரன்: கு –அஞ்ஞான இருள், ரு – நீக்குபவன், ஆன்மாக்களின் அறியாமை என்ற அஞ்ஞான இருளை அகற்றுபவன்.
குருநாதன்: சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன்.
காங்கேயன்: கங்கையில் தோன்றியதால் கங்கையின் மைந்தன் காங்கேயன் என்று முருகப் பெருமான் அழைக்கப்படுகிறான்.
கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் ஆதலின் கார்த்திகைப் பெண்களின் மைந்தன் கார்த்திகேயன்.
கந்தன்: கந்து யானை கட்டும் தறியைக் குறிக்கும். கந்தன் என்பவன் ஆன்மாக்களை கட்டும் தறியாய், அவர்களுக்கு பற்றுக்கோடாய் இருப்பவன்.பகைவர்களின் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
கடம்பன்: கடம்ப மலர்களை அணிந்தவன் ஆதலால் கடம்பன் என்று அழைக்கப்படுகிறான்.
சரவண பவன்: சரம் என்றால் நாணல், வனம் என்றால் காடு, பவன் என்றால் தோன்றியவன் என்பது பொருளாகும்.நாணல் மிகுந்த தண்ணீர் உள்ள காட்டில் தோன்றியவன் சரவண பவன் என்றழைக்கப்படுகிறான்.
சுவாமி: ஸ்வம் என்றால் சொத்து. எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுமாமி உள்ள மலை சுவாமி மலை.
சுரேஷன்: தேர்களின் தலைவன் சுரேஷன்.
செவ்வேள்: செம்மையான நிறத்தினை உடையவன். ஞானச் செம்மையை உடையவன் செவ்வேள்.
சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருந்தவன். அதாவது சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய போது செந்தழல் பிழம்பாய் இருந்தவன் சேந்தன்.
சேயோன்: சேய் என்றால் குழந்தை என்பது பொருளாகும். குழந்தை வடிவான முருகன் சேயோன் என்றழைக்கப்படுகிறான்.
விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
வேலவன், வேலன்: வேலினை உடையவன் வேலன். வேலானது எதனையும் வெல்லும் ஆற்றல் உடையது. அறிவாகவும், ஞானத்தின் வடிவமாகவும் விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
முத்தையன்: முத்தானது இயற்கையாகவே ஒளிரும் தன்மையுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால்தான் ஒளிரும். முத்தினைப் போல் இயற்கையாகவே ஒளிர்பவன் முத்தையன்.
சோமாஸ்கந்தன்: சிவன் உமை முருகனின் வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.
சுப்பிரமணியன்: சு என்பது மேலான, பிரம்மம் என்பது பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது, மேலான பெரிய பிரம்மத்திலிருந்து தோன்றி ஒளிர்பவன் சுப்ரமணியன்.
வள்ளற்பெருமான்: முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளியாகிய இச்சா சக்தி மூலம் இக நலன்களை வழங்குகிறான். அவன் விண்ணுலக மங்கையான தெய்வயானையாகிய கிரியா சக்தி மூலம் பரலோக நன்மைகளை வழங்குகிறான். தன்னுடைய வேலான ஞானசக்தி மூலம் முக்தியையும் வழங்குகிறான். இவ்வுலக உயிர்கட்கு தேவையானவற்றை வழங்குவதால் வள்ளற்பெருமான் என்று அழைக்கப்படுகிறான்.
ஆறுபடை வீடுடையோன்: நம்முடைய உடலில் உள்ள ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவற்றின் வடிவாக ஆறுபடை வீடுகளாய் கொண்டுள்ளார்.
மயில்வாகனன்: ஆணவத்தின் வடிவமான மயிலினை அடக்கி வாகனமாகக் கொண்டதால் மயில்வாகனன் என்றழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் ஆணவத்தின் வடிவமான மயிலையும், கன்மத்தின் வடிவமான யானையையும், மாயையின் வடிவமாக ஆட்டினையும் அடக்கி வாகனமாக் கொண்டவர்.
தமிழ்தெய்வம்: தமிழின் வடிவம் முருகன் ஆவான். தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களும் முருகப்பெருமானின் 12 தோள்களைக் குறிப்பிடுகின்றன. 18 மெய்எழுத்துக்கள் முருகனின் 18 கண்களைக் குறிக்கின்றன. அதாவது முருகப் பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர் ஆதலால் இவருக்கும் நெற்றியில் கண் உண்டு. ஆதலால் ஆறு முகங்களிலும் முகத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 18 கண்களை உடையவர். தமிழின் இனஎழுத்துக்கள் ஆறும் இவருடைய 6 முகங்களைக் குறிக்கின்றன. ஃ என்ற ஆயுத எழுத்து வேலினைக் குறிக்கிறது. இதனால் முருகன் தமிழ்தெய்வம் என்று போற்றப்படுகிறார்.
எல்லா வல்ல பரம்பொருளான முருகக்கடவுளை வழிபட்டு வாழ்வின் நன்மைகள் அனைத்தும் பெறுவோம்.